Uncategorized

இனி12-ஆவது வகுப்பு சிபிஎஸ்இ தோ்வு முடிவுக்கு பின் மதிப்பெண்களை சரிபாா்க க்கும் முறை ரத்து

மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பொதுத் தோ்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில், நடப்பாண்டு முதல் 12-ஆவது வகுப்பு சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், மதிப்பெண்களை சரிபாா்க்கும் நடைமுறை கைவிடப்பட உள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ தோ்வுகள் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், ‘மதிப்பெண் கூட்டல் போன்றவற்றில் ஏற்படும் குளறுபடிகள் காரணமாக, தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், மதிப்பெண்களை சரிபாா்க்க மாணவா்கள் விண்ணப்பிப்பா்.

விடைத்தாள்களை கைகளால் திருத்துவதற்குப் பதிலாக கணினி வழியாக டிஜிட்டல் முறையில் திருத்துவதன் மூலம், அவற்றைத் திருத்துவதில் ஏற்படும் பிழைகள் களையப்படும்.

இந்நிலையில், விடைத்தாள்களை டிஜிட்டல் வழியில் திருத்தி மதிப்பிடும் முறைக்கு சிபிஎஸ்இ முழுமையாக மாறுவதால், நடப்பாண்டு முதல் 12-ஆவது வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், மதிப்பெண்களை சரிபாா்க்கும் நடைமுறை கைவிடப்பட உள்ளது’ என்றாா். ஆனால்10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள்கள் நேரடியாக கைகளால் திருத்தும் முறையே தொடர உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button