அரசியல்அறிவியல்ஆன்மிகம்இந்தியாஉலகம்கல்விகுற்றங்கள்தமிழ்நாடுதொழில்நுட்பம்மருத்துவம்மாநில செய்திகள்மாவட்ட செய்திகள்
தொழிலாளர் ஆணையரகம் மற்றும் சார்நிலை அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, அண்ணாநகரில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர் ஆணையரகம் மற்றும் அதன் சார்நிலை அலுவலகங்களுக்கான புதிய கட்டிடத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் செயல்பட்டு வரும் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், சென்னை,கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், சென்னை, தொழிலாளர் இணை ஆணையர்-1 அலுவலகம் மற்றும் சென்னை, தொழிலாளர் இணை ஆணையர்-2 அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் மேற்படி புதிய அலுவலக கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.


