அரசியல்அறிவியல்ஆன்மிகம்இந்தியாஉலகம்கல்விகுற்றங்கள்தமிழ்நாடுதொழில்நுட்பம்மருத்துவம்மாநில செய்திகள்மாவட்ட செய்திகள்
பீகார் தேர்தல்: மதியம் 5 மணி நிலவரப்படி 60.13 சதவீத வாக்குகள் பதிவு

பீகார் சட்டசபை தேர்தல் இன்று மற்றும்11-ந்தேதி என 2 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமாக 121 சட்டசபை தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இந்த 121 தொகுதிகளில் மொத்தம் 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
10 லட்சத்து 72 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள்.அவர்களில் 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் 18 மற்றும் 19 வயதானவர்கள் ஆவர். மொத்தம் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 122 பெண் வேட்பாளர்களும்,ஒரு திருநங்கை வேட்பாளரும் அடங்குவர்.


