அரசியல்அறிவியல்ஆன்மிகம்இந்தியாஉலகம்கல்விகுற்றங்கள்தமிழ்நாடுதொழில்நுட்பம்மருத்துவம்மாநில செய்திகள்மாவட்ட செய்திகள்
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்துவது, சிறு குற்றஙகளுக்கு சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதா உள்பட 9 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
அதேபோல், 2வது முறை நிறைவேற்றப்பட்ட தமிழக நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதாவுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார். மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இவை அரசு நாளிதழில் வெளியிடப்பட்டு பின்னர் சட்டமாக அமலுக்கு வர உள்ளது.


